“பாப்பா என்கூட வா…” 3 வயது குழந்தையை அழைத்து சென்ற 35 வயது நபர்… வயலில் கிடந்த சடலம்… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on கார்த்திகை 2, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூரில் 3 வயது பிஞ்சுச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பையும் கலவரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டம் முஸ்கரா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள வயல்வெளியில் 3 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த 35 வயது அண்டை வீட்டு வாலிபர் ஒருவன் சிறுமியை ஆசை வார்த்தை காட்டி அழைத்துச் சென்று, வயல்வெளியில் வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகச் சிறுமியின் பெற்றோர் முஸ்கரா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த கிராம மக்கள் திரண்டு போலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் கலவரமாக மாறிய இந்தச் சம்பவத்தில் கூட்டம் காவல்துறையினர் மீது சரமாரியாகக் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 6 போலிஸ் வாகனங்களின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டுச் சேதமடைந்தன. சூழ்நிலை கைமீறிச் சென்றதால் பிஏசி படை மற்றும் பல காவல் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளதாக ஹமீர்பூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.