“அடப்பாவி இப்படி பண்ணிட்டியே?”… ஈவு இரக்கமில்லாமல் பெற்ற தந்தையையே மகன் செய்த கொடூரம்… காவிரி ஆற்றங்கரையோரம் காத்திருந்த பேரதிர்ச்சி…!

By Nanthini on ஐப்பசி 27, 2025

Spread the love

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர் தேக்க பகுதியான கோட்டையூர் பரிசல் துறை காவிரி ஆற்றில் 70 வயது உடைய முதியவர் ஒருவரின் சடலம் மிதந்துள்ளது. இதனை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. அதாவது உயிரிழந்தவர் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் காவிரி கரையோரம் உள்ள கோபிநந்தம் கிராமத்தை சேர்ந்த சங்கரன் என்பவர் என தெரிய வந்தது.

இவருக்கும் அவருடைய மகன் கோவிந்தராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த மகன் தனது தந்தையை அடித்து கொலை செய்த காவிரி ஆற்றில் வீசியுள்ளார். பிறகு சங்கரன் உடல் தண்ணீரில் அடித்து வரப்பட்டு கோட்டையூர் பரிசல் துறையில் கரை ஒதுங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலை போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில் உடனே கோட்டையூர் பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் சங்கரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து சங்கரனை அடித்துக் கொன்ற அவருடைய மகனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.