மும்பை மீரா-பயந்தர் பகுதியில் போதையில் இருந்த நபர் ஒருவர் தன்னை “பாஸ் அப்ரார் பாய்” என்று கூறிக்கொண்டு, மற்றொருவரை ஆபாசமாக திட்டி மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோவில் அந்த நபர் தன்னை எதிர்த்துப் பதிவு செய்பவர்களை நோக்கிச் சீறிப் பாய்ந்து தகாத வார்த்தைகளால் திட்டுவது பதிவாகியுள்ளது. ஆனால், அருகில் நின்று கொண்டிருந்த காவலர் அதைக் கண்டிக்காமல் புன்னகையுடன் மௌன பார்வையாளராக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
https://www.instagram.com/reel/DeQOdZQIDQp/?utm_source=ig_web_button_share_sheet
காவல்துறையினர் அருகில் இருக்கும்போதே ஒருவன் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தும், காவல்துறை தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாதது இணையத்தில் பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ ஆயிரக்கணக்கான பார்வைகளைக் கடந்து நெட்டிசன்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது.
