வேலை தருவதாகக் கூறி 30 இளம்பெண்களுடன் உல்லாசம்…. வசமாகச் சிக்கிய ‘கில்லாடி’ வாலிபன்….. வெளிவந்த திடுக்கிடும் உண்மை….!

By Nanthini on புரட்டாதி 2, 2026

Spread the love

கர்நாடக மாநிலத்தில் இஸ்ரோ அமைப்பில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடமிருந்து பணம் பறித்த ஈரண்ணா படிகர் என்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விஜயாப்புரா மாவட்டத்தைச் சேர்ந்த இவர், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கி, தான் பெங்களூரு இஸ்ரோவில் பணியாற்றுவதாகப் பொய் பிரசாரம் செய்துள்ளார். இதனை நம்பி வேலைதேடி அணுகிய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இந்தச் சதியில், 30-க்கும் மேற்பட்ட இளம்பெண்களைத் தனது வலையில் வீழ்த்தி அவர்களிடம் பணத்தைப் பறித்ததுடன் பாலியல் ரீதியாகவும் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். வேலை கிடைக்காததால் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் கதக் நகரப் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணைக்கு பின் அவரை வீட்டில் வைத்து கைது செய்தனர். அவரிடமிருந்து ஆபாசப் படங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.