மாற்றுத்திறனாளி பெண்ணின் வாயில் துணியை திணித்து… கதற கதற வாலிபர் செய்த கொடூரம்… வீட்டுக்கு திரும்பிய தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…!

By Nanthini on புரட்டாதி 21, 2025

Spread the love

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் இளம் பெண் ஒருவர் தன் தாயுடன் வசித்து வந்துள்ளார். அந்த இளம் பெண் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. அவருடைய தாய் கூலி வேலை செய்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இளம்பெண்ணின் தாய் வழக்கம் போல வேலைக்குச் சென்றுவிட்டார். இதனால் இளம்பெண் வீட்டில் தனிமையாக இருந்த சமயத்தில் அதே பகுதியை சேர்ந்த அபு பாஷா (36) என்ற நபர் அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். பிறகு இளம் பெண்ணை கட்டாயப்படுத்தியவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். ஆனால் அதற்கு இளம்பெண் மறுத்ததால் அவருடைய ஆடைகளை கிழித்து எறிந்து தாக்கியதுடன் வாயில் துணியை திணித்து பலாத்காரம் செய்துள்ளார்.

இதனிடையே கூலி வேலைக்கு சென்ற இளம் பெண்ணின் தாய் வீட்டுக்கு வந்ததால் பயந்துபோன அந்த நபர் பலாத்காரம் முயற்சியை கைவிட்டு வெளியே அவசர அவசரமாக ஓடினார். அவருடைய நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த இளம் பெண்ணின் தாய் அவரை பிடிக்க முயன்ற நிலையில் அவரை தள்ளி விட்டுவிட்டு அங்கிருந்து அந்த வாலிபர் தப்பி சென்று விட்டார். பிறகு சம்பவம் பற்றி போலீசில் அவர் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபரை கைது செய்தனர். தற்போது அவரிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.