“என்னை லவ் பண்ண மாட்டியா…?” வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்… சரமாரியாக குத்தி கொன்ற கொடூரன்… கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

By Devi Ramu on கார்த்திகை 1, 2026

Spread the love

ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டம் ஜங்காரெட்டிகூடெம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 29 வயதுப் பெண்ணை நபர் ஒருவன் கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஜங்காரெட்டிகூடெம் பகுதியைச் சேர்ந்த ஸ்வப்னா (29) என்ற பெண் சம்பவம் நடந்த அன்று தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு அத்துமீறி நுழைந்த ராமகிருஷ்ணா என்பவன், ஒருதலைக் காதல் மற்றும் வெறி காரணமாகத் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஸ்வப்னாவைச் சரமாரியாகக் குத்தியுள்ளான். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் குற்றவாளி ராமகிருஷ்ணா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.

   

ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஸ்வப்னாவை மீட்ட பொதுமக்கள், உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தப்பியோடிய குற்றவாளி ராமகிருஷ்ணாவைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தீவிர வேட்டை நடத்தி வருகின்றனர்.