மகாராஷ்டிரா மாநிலம் வார்தா பகுதியில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட காதிர் அலி என்ற நபர், அங்கிருந்த பெண் மருத்துவர் டாக்டர் ஷத்தா பூமிரே என்பவரை காவல்துறையினர் முன்னிலையே கன்னத்தில் அறைந்துள்ள கொடூரச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுகாதார நிலையத்திற்குள்ளேயே போலீசாரின் கண் எதிரே இந்த அத்துமீறல் அரங்கேறியுள்ளமை சிசிடிவி கேமராவில் பதிவாகி வைரலாகியுள்ள நிலையில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு வழங்குவதை வலியுறுத்தி மருத்துவர்கள் ஓபிடி சேவைகளைப் புறக்கணிக்கப் போவதாக எச்சரித்துள்ள இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
