“குடும்பத்தை சீரழித்த சந்தேகம்”… மனைவியை கொன்று கணவனும் தற்கொலை… பெற்றோர் இல்லாமல் கதறும் 3 குழந்தைகள்…!

By Nanthini on ஐப்பசி 14, 2025

Spread the love

உத்திரபிரதேசம் மாநிலத்தில் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்ட கணவர் அவரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் பதேபூர் மாவட்டத்தை சேர்ந்த முகேஷ் நிஷாத் என்பவருக்கு குடியாதேவி என்ற பெண்ணுடன் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் தன் மனைவி வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக கணவருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதனால் அடிக்கடி தன் மனைவியுடன் அவர் பிரச்சனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று இது தொடர்பாக கணவன் மனைவியிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த முகேஷ் தன் வீட்டில் இருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து மனைவியை சுட்டு படுகொலை செய்தார். பிறகு அதே துப்பாக்கியால் தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர்களுடைய வீட்டிலிருந்து துப்பாக்கி சத்தம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த அக்கா பக்கத்தினர் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தாய் மற்றும் தந்தை இழந்ததால் யாரும் இல்லாமல் மூன்று குழந்தைகள் பரிதவிக்கும் சம்பவம், காண்போரை கலங்க வைத்துள்ளது.