உத்தரபிரதேச மாநிலம் இட்டாக் மாவட்டம் அம்ரோலி கிராமத்தில் ஒரு நபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அனீஷ் என்பவரின் மனைவிக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த கிஷோர் என்ற இளைஞருக்கும் இடையே தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் அனீஷுக்குத் தெரியாமல் அவ்வப்போது சந்தித்து வந்துள்ளனர்.
கடந்த ஜூன் 18-ம் தேதி இரவு அனீஷ் வீட்டில் இல்லாத நேரத்தில் கிஷோர் அங்கு சென்றுள்ளார். கிஷோர் வீட்டை விட்டு வெளியேற முயன்றபோது அனீஷ் வீட்டிற்கு வந்துள்ளார். கிஷோரைக் கண்டதும் அனீஷ் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த வாக்குவாதத்தின் போது ஆத்திரமடைந்த கிஷோர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் அனீஷைச் சுட்டதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அனீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் கிஷோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாரங்கல் நகரில் இரவின் அமைதியைக் குலைக்கும் வகையில், மதுபோதையில் இருந்த நபர்கள் சிலர் எல்லைமீறிய ஆட்டத்திலும் அராஜகத்திலும் ஈடுபட்டு பொதுமக்களுக்கு…
பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் நிரப்பி முடிந்தவுடன், பணத்தைச் செலுத்தியதும் அவசரத்தில் வாகனத்தை உடனே இயக்கும் வழக்கம் பல டிரைவர்களிடம் உள்ளது.…
கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் சிஞ்சோளியைச் சேர்ந்த 32 வயதான அர்ச்சனா என்ற பெண், குடும்பத் தகராறு காரணமாக அவரது…
இந்திய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் மேலாளர் மகேஷ் ஷெல்கே, மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக்…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து ஆளும்கட்சியான…
தமிழகத்தில் தமிழக வெற்றி கழகத் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருவதாகவும், அந்த ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் தீவிரமாக ரகசியத் திட்டம்…