“அண்ணா நான் உனக்கு தங்கச்சி முறை” கதறிய 17 வயது சிறுமி… வாயை பொத்தி இழுத்துச் சென்று… கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி..!!

By Soundarya on வைகாசி 18, 2026

Spread the love

உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், மே 3-ஆம் தேதி தனது உறவினர் வீட்டுத் திருமணத்திற்காகச் சொந்த ஊருக்கு வந்துள்ளார். கடந்த மே 11-ஆம் தேதி இரவு 11:15 மணியளவில், திருமணச் சடங்குகள் முடிந்து அந்தச் சிறுமி மட்டும் தனியாக வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த அதுல் என்ற வாலிபர், சிறுமியின் வாயைப் பொத்தி, வலுக்கட்டாயமாக ஒரு பாழடைந்த இடத்திற்கு கடத்திச் சென்றுள்ளார். அங்குச் சிறுமியை ஒரு மரத்தில் கட்டி வைத்த அந்த வாலிபர், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதற்கு அந்தச் சிறுமி மறுப்பு தெரிவித்ததோடு, “நீ எனக்கு அண்ணன் முறை வேண்டும், உன்னை நான் அண்ணன் என்றுதான் கூப்பிடுவேன், உன்னைத் திருமணம் செய்ய முடியாது” என்று தெளிவாக விளக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அதுல், அந்தச் சிறுமியைத் கொடூரமாக அடித்துத் துவைத்துக் அரைகுறை உயிராக்கியுள்ளார். அதன் பின்னரும் சிறுமி திருமணத்திற்குச் சம்மதிக்காததால், ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற அந்த வாலிபர், சிறுமியின் இரண்டு ரகசிய உறுப்புகளையும் தனது பற்களால் கடித்துக் குதறியுள்ளார்.