“போங்கடா நீங்களும் உங்க வண்டியும்”… அடிக்கடி பழுதான ஓலா ஸ்கூட்டர்… ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த நபர்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!

By Nanthini on ஐப்பசி 11, 2025

Spread the love

குஜராத்தில் அடிக்கடி பழுதான ஓலா ஸ்கூட்டரை வாடிக்கையாளர் ஷோரூம் வாசலில் தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷோரூம் வாசலிலேயே ஓலா ஸ்கூட்டரை தீ வைத்து கொளுத்திய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தான் வாங்கிய ஓலா ஸ்கூட்டர் பலமுறை பழுதானதை புகார் அளித்தோம் எந்த நடவடிக்கையும் எடுக்காத விரக்தியில் அந்த நபர் இவ்வாறு செய்து உள்ளார்.

கடந்த சில நாட்களாகவே இது தொடர்பான புகார்கள் அடிக்கடி எழுந்த வண்ணம் உள்ளது. ஆனால் தற்போது விரக்தியின் உச்சத்திற்கு சென்ற அந்த நபர் ஷோரூம் வாசலில் வைத்து ஆசை ஆசையாக வாங்கிய ஸ்கூட்டரை தீவைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.