“அண்ணா நான் உங்க தங்கச்சி மாதிரி விட்ருங்க”…. நண்பனின் மனைவியை கதற கதற சிதைத்த கொடூரம்…. இறுதியில் செல்போனில் காத்திருந்த பேரதிர்ச்சி….!

By Nanthini on மாசி 22, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நண்பரின் மனைவியைப் பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டிய நபர் குறித்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. பீகாரைச் சேர்ந்த தையல்காரர் ஒருவர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் பெங்களூரு கோவிந்தாபுரா பகுதியில் வசித்து வந்தார். இவருக்கு ஜஹாங்கீர் என்ற நபர் தொழிலில் உதவி செய்ததன் மூலம் நெருங்கிய நண்பரானார். இந்த நட்பைத் தவறாகப் பயன்படுத்திக்கொண்ட ஜஹாங்கீர், கடந்த 2023-ஆம் ஆண்டு தையல்காரர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது மனைவியைக் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்தக் கொடுமையை ஜஹாங்கீர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து கொண்டு, இதனை யாரிடமாவது கூறினால் வீடியோவை வெளியிட்டு விடுவதாகவும், கொலை செய்து விடுவதாகவும் அப்பெண்ணை மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த அந்தப் பெண் யாரிடமும் சொல்லாமல் மௌனமாக இருந்துள்ளார். இதைப் பயன்படுத்திக் கொண்ட அந்த நபர், தொடர்ந்து அந்தப் பெண்ணுக்குப் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வந்துள்ளார். சமீபத்தில் அந்தப் பெண் தனது சொந்த ஊரான பீகாருக்குச் சென்றுவிட்டு மீண்டும் பெங்களூரு திரும்பியபோது, ஜஹாங்கீர் மீண்டும் அவரைத் துன்புறுத்தத் தொடங்கியுள்ளார்.

   

தன்னுடன் உல்லாசமாக இருக்க வரவில்லை என்றால், ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும், அதைத் தவிர்க்க 5 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என்றும் ஜஹாங்கீர் மிரட்டியுள்ளார். இதனால் கடும் அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்த அந்தப் பெண், துணிச்சலுடன் கோவிந்தாபுரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் ஜஹாங்கீர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள அந்த நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.