மாதவரம் அருகே தனியார் கம்பெனியில் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய பெண்ணிடம் ஆபாசமாக பேசிய நபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியில் வசித்து வரும் 31 வயது பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றார். இவர் ஜிஎன்டி சாலையில் உள்ள ஒரு தேநீர் கடையில் தேனீர் அருந்தியுள்ளார். அந்த சமயத்தில் அங்கு வந்த நபர் ஒருவர் அந்த பெண்ணின் தோள்பட்டையில் கையை வைத்து ஆபாசமாக பேசினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அவருடைய கையை தட்டி விட்டு உடனே காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கிருந்த நபரை அழைத்துச் சென்ற விசாரித்ததில் அவர் பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்த மோசஸ் என்ற அப்பு (25) என்பது தெரியவந்துள்ளது. அவர் மீது தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளும் திரைப்படத் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது…
தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 201…
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஆர்சிபி (RCB) பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மயந்தி லாங்கரிடம் பேசுகையில், இந்திய…
இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, மேற்காசியாவில் நிலவி வரும்…
குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் நடைபெற்ற பஜனை நிகழ்ச்சியில் (டயரோ), பிரபல பாடகர் ஜிக்னேஷ் கவிராஜ் மீது ரசிகர்கள் கோடிக்கணக்கான…
கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த கேரள சட்டமன்றத்…