“பக்கவாத கணவர்…கள்ளக் காதலனுடன் உல்லாசம்”…. பெற்ற தாயுடன் சேர்ந்து பெங்களூரு பெண் செய்த அதிர்ச்சி காரியம்…. அம்பலமான உண்மை….!

By Nanthini on புரட்டாதி 14, 2026

Spread the love

பெங்களூர் அவலஹள்ளி காவல் எல்லைக்கு உட்பட்ட எல்லப்பா கார்டன் பகுதியில் வசித்து வந்த முபாரக் என்பவருக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட திடீர் பக்கவாத பாதிப்பால் நடமாட முடியாமலும் வேலைக்குச் செல்ல முடியாமலும் போனது. இதனால் ஏற்பட்ட தீவிர பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி, அதே பகுதியைச் சேர்ந்த நஹிம் குரேஷி என்பவர் அப்ப குடும்பத்திற்குப் பண உதவியும் உணவுப் பொருட்களும் வழங்கி நெருக்கமாகியுள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் முபாரக்கின் மனைவி ஷாஹினா பானுவிற்கும் நஹிம் குரேஷிக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியது.

கணவர் முபாரக் படுக்கையிலேயே முடங்கிக் கிடந்த சூழலைச் சாதகமாக்கிக் கொண்டு, ஷாஹினா பானுவும் நஹிம் குரேஷியும் தங்கள் தவறான உறவைத் தொடர்ந்து வந்துள்ளனர். உடலநலக் குறைவிலும் இதனைக் கவனித்து கண்டித்த முபாரக், தங்கள் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக ஷாஹினா பானு கருதினார். இதனால் கணவரை முழுமையாகத் தீர்த்துக்கட்டிவிட்டு, காதலனுடன் சேர்ந்து வாழத் திட்டமிட்ட ஷாஹினா, இச்சதித்திட்டத்திற்குத் தன் தாய் ஹசீனா மற்றும் காதலன் நஹிம் குரேஷியின் ஆதரவையும் பெற்றார்.

   

திட்டமிட்டபடி கடந்த 9-ஆம் தேதி, படுக்கையில் ஆதரவின்றிக் கிடந்த முபாரக்கை மூன்று பேரும் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்தனர். சதியை மறைப்பதற்காக, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த முபாரக் மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை மரணமடைந்துவிட்டதாக நாடகமாடி சடலத்தை அடக்கம் செய்ய முயன்றனர். ஆனால், அவர்களின் நடவடிக்கைகளில் எழுந்த சந்தேகத்தின் பேரில் அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவலஹள்ளி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

   

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ ஆய்வில் முபாரக் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஷாஹினா பானுவிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கணவரைக் கொன்று காதலனுடன் வாழ முயன்றதாக அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஷாஹினா பானு, கள்ளக்காதலன் நஹிம் குரேஷி மற்றும் தாய் ஹசீனா ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.