அரசு மருத்துவமனையில் அந்தரங்க லீலை?… அரை நிர்வாணத்துடன் சிக்கிய நபர்…. பதறியடித்து விளக்கம் கொடுத்த அரசு….!

Spread the love

கோவை, வடவள்ளியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், அரசு அலுவலக அறை ஒன்றில் நபர் ஒருவர் அரை நிர்வாணத்துடன் காணப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வடவள்ளி பெரியார் நகரில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான துணை சுகாதார நிலையக் கட்டிடத்தை, அங்கு பணியாற்றும் நகர்ப்புற சுகாதார செவிலியர் கனிதா மற்றும் அவரது கணவர் ஷ்யாம் சுந்தர் ஆகியோர் தங்களது தனிப்பட்ட பயன்பாட்டிற்கு ஆக்கிரமிப்பு செய்திருந்ததே இந்த பரபரப்பிற்கு காரணம் எனத் தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து தமிழ்நாடு அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக விளக்கம் அளித்துள்ளது. கடந்த மே 2025 முதல், கனிதா அங்கு பணியமர்த்தப்பட்டு தடுப்பூசி மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கான பரிசோதனைகளை வழங்கி வருகிறார். எனினும், அந்த அரசு வளாகத்தில் முறையற்ற வகையில் வீட்டு உபயோகப் பொருட்களை வைத்தும், தனிப்பட்ட குடியிருப்பாகப் பயன்படுத்தியும் வந்தது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைகேடு தொடர்பாக, சம்பந்தப்பட்ட செவிலியர் மற்றும் அவரது கணவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த அவலநிலையைக் கவனிக்கத் தவறிய மாநகர சுகாதார அலுவலரிடமும் விளக்கம் கோரப்பட்டுள்ளது. பொதுமக்களுக்குச் சேவையாற்ற வேண்டிய அரசு சுகாதார நிலையம் இவ்வாறு தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, அந்த சுகாதார நிலையத்தை முறைப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இனி வரும் காலங்களில் பொதுமக்களுக்குச் சிகிச்சை அளிக்க இரண்டு அறைகளை ஒதுக்குமாறும், சிகிச்சை அறைக்கும் குடியிருப்பு பகுதிக்கும் இடையில் தடுப்புச் சுவர் அமைத்துத் தனி வாசல் ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அந்த இடத்தை இனி ‘துணை சுகாதார நிலையம்’ என்று முறையாக அழைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

5 மணத்தியாலங்கள் ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

6 மணத்தியாலங்கள் ago

“என்னை விடுங்க…” புல் அறுக்க சென்ற பெண்… கை,கால்களை பிடித்து அடிக்கும் வாலிபர்கள்… கதறி துடித்த சோகம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ கடவுளே… காது சியாம்ஜி தரிசனம் முடிந்து… திரும்பியபோது நேர்ந்த கோர விபத்து… காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பரிதாப பலி… கதற வைக்கும் சோகம்…!!

குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…

6 மணத்தியாலங்கள் ago