பீகார் மாநிலத்தில் உள்ள சுபால் என்ற மாவட்டத்தில் மித்லேஷ் குமார் முகியா என்ற 24 வயது வாலிபர் வசித்து வருகின்றார். இவருக்கும் அத்தை ரீட்டாதேவி (28) என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்த நிலையில் சம்பவத்தன்று மித்லேஷ் குமார் தன்னுடைய மாமா சிவச்சந்திர முகியா வீட்டில் இல்லாத நேரத்தில் அத்தை ரீட்டா தேவியுடன் உல்லாசத்தில் இருந்து உள்ளார். இதனை அப்பகுதியை சேர்ந்த உறவினர்கள் சில பார்த்து விட்ட நிலையில் உடனே ரீட்டாதேவியின் கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதேசமயம் உறவினர்களும் சம்பவ இடத்தில் திரண்டனர். இதனைத் தொடர்ந்து வாலிபரை சரமாரியாக கட்டையால் தாக்கினார்கள். இதனைத் தொடர்ந்து அத்தை ரீட்டாதேவியை வரவழைத்து அந்த வாலிபருக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியாகி உள்ள நிலையில் அந்த வாலிபரை சிலர் தாக்குவது போன்று அத்தை ரீட்டாதேவிக்கு அவர் குங்குமம் வைப்பது போலவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து வாலிபரின் தந்தை ராமச்சந்திரா போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபரை தாக்கியவர்களை தேடி வருகிறார்கள். ரீட்டா தேவிக்கு நான்கு வயதில் மகன் இருக்கும் நிலையில் தன்னைவிட வயது குறைந்த நபருடன் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…
கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…
தமிழ் திரையுலகில் 80 மற்றும் 90-களில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்த 'மக்கள் நாயகன்' ராமராஜன், அதிமுகவின் தீவிர விசுவாசியாகவும் திருச்செந்தூர்…