பாலக்காட்டில் உள்ள முட்டி குளங்கர ஏ ஆர் முகாமை சேர்ந்த போலீஸ்காரர் மணிகண்டன் செய்த செயல் பலரையும் வியக்க வைத்துள்ளது. மணிகண்டன் ஆம்புலன்ஸ் உடன் ஓடிய நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸுக்கு வழி அமைக்க போக்குவரத்தை சீர் செய்வதை காட்டும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அவரது விரைவான மற்றும் தன்னலமற்ற செயலுக்காக அவர் தற்போது பாராட்டப்பட்டு வருகிறார். சாலையில் வேகமாக பயணிக்கக் கூடிய வாகனங்களுக்கு இடையில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அவர் செய்யும் இந்த செயல் அவரது தன்னலமற்ற மனப்பான்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.
அந்த வீடியோவில் முதலில் திருச்சூரிலிருந்து எர்ணாகுளத்திற்கு ஒரு நோயாளியை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுவதால் வெளியிடப்பட்டது. பிறகு அந்த வீடியோவை கேரள காவல்துறையினர் தற்போது இணையத்தில் பரப்பி வருகிறார்கள். மணிகண்டன் தினம்தோறும் தேசிய நெடுஞ்சாலையில் 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களுக்கு சாலை வழியை சீர் செய்து, அவை தடையில்லாமல் அந்த இடத்தை கடக்க உதவுகின்றார்.
பாலக்காடு கோட்டையை சேர்ந்த 33 வயதான மணிகண்டன் மூன்று மாதங்களுக்கு முன்பு காவல்துறையில் சேர்ந்து உள்ளார். அம்பலூரில் போக்குவரத்து நெரிசல் குறித்து ஆரம்பத்தில் அவருக்கு குழப்பம் இருந்த போதும் ஆம்புலன்ஸ்களை விரைவாக போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொள்ளாமல் வெளியேற்றத் தொடங்கியதும் அந்த வேலை உற்சாகமாக மாறியதாக மணிகண்டன் கூறுகின்றார். அவர் செய்த சேவை குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகிய பலருடைய பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
தொகுதிப் பங்கீடு தொடர்பான சிறுசிறு சலசலப்புகளைத் தள்ளிவைத்துவிட்டு, கொள்கை ரீதியான பெரும் போராட்டத்திற்காக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மீண்டும்…
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…