என்னால நம்பவே முடியல..! சீனாவில் பொதுஇடத்தில் ஆப்பிள் லேப்டாப்பை வைத்து சென்ற நபர்… திரும்பி வந்து பார்த்தபோது நடந்த அதிசயம்…!!

By Soundarya on புரட்டாதி 12, 2025

Spread the love

சீனாவின் சூப்பர் மார்க்கெட்டில் சோசியல் மீடியா இன்ஃப்ளுயன்சர் ஒருவர் விலை மதிப்பு மிக்க லேப்டாப் ஒன்றை பொது இடத்தில் வேண்டுமென்றே வைத்து சென்றுள்ளார் . இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “மக்கள் நடமாட்டம் இருந்த ஒரு வணிக வளாகத்தில் உள்ள உணவகம் ஒன்றின் மேசையில் என்னுடைய ஆப்பிள் லேப்டாப்பை வைத்து சென்றேன். அரை மணி நேரமாக மால் முழுவதும் சுற்றி வந்துவிட்டு மீண்டும் லேப்டாப் வைத்த இடத்திற்கு திரும்பி சென்றேன்.

 

   
View this post on Instagram

 

A post shared by Tincho (@tincho.adventures)

திரும்பி வரும் பொழுது அந்த லேப்டாப் அந்த இடத்தில் அப்படியே இருந்தது என்று கூறியுள்ளார் .இதோடு பாரீஸாக இருந்தால் எட்டு வினாடிகளில் காணாமல் போயிருக்கும். புதுடெல்லியாக இருந்தால் 12 வினாடிகளில் காணாமல் போயிருக்கும். அமெரிக்காவின் நியூயார்க்காக இருந்தால் 25 வினாடிகளில் லேப்டாப் காணாமல் போயிருக்கும். ஆனால் சீனாவில் அப்படியே பாதுகாப்பாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.