மாயமில்ல மந்திரம் இல்ல, இதோ பாருங்க… பாம்பை காட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் பணம் பறித்த நபர்…. அலறிய பயணிகள்… ஷாக்கிங் வீடியோ…!

By Nanthini on புரட்டாதி 23, 2025

Spread the love

அகமதாபாத் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மத்திய பிரதேச மாநிலம் வழியாக வந்தபோது மங்காலி என்ற ரயில் நிலையத்தில் ஒருவர் ஏரி உள்ளார். ரயில் புறப்பட்டதும் அவர் தன் கையில் திடீரென மறைத்து வைத்திருந்த பாம்பு ஒன்றை வெளியே எடுத்த நிலையில் அங்கிருந்த பயணிகள் அனைவரும் பயத்தில் உறைந்து போயினர். பாம்பை காட்டி பயணிகளிடம் அவர் பணம் கேட்டுள்ளார். அவர்களும் பயந்து போய் அவரிடம் பணம் கொடுத்துள்ளனர். அங்கு நடந்த இந்த சம்பவத்தை பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலான அதே நேரத்தில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட அந்த நபர் மீது ரயில்வே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் இந்த வீடியோவை எடுத்த நபர் ரயில்வேக்கு புகார் அளித்த நிலையில் இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே போலீஸ் சார் தெரிவித்துள்ளனர். மேலும் உங்களுடைய பயண விவரங்கள் மற்றும் செல்போன் நம்பர் எங்களுக்கு தேவைப்படும், DM வழியாக முன்னுரிமை வழங்கப்படும். உங்கள் புகாரை https://railmadad.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலமாக அனுப்பலாம் அல்லது விரைவாக தீர்வு பெற 139 என்ற நம்பருக்கு டயல் செய்யலாம் என்று ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.