வேலை வாங்கி கொடுத்த உறவினர்…! “லேட்டாக வந்ததால் பிரம்பால் அடித்து…” ஆத்திரத்தில் அடித்தே கொன்ற நபர்… பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on கார்த்திகை 10, 2025

Spread the love

திருப்பத்தூர் மாவட்டம் லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அலிஜான்(65) இவரது மனைவி நிஷா. இவர்களுக்கு இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.  ஆசிரியர் நகர் பகுதியைச் சேர்ந்த 65 வயது கார்த்திகேயன் அலிஜானின் குடும்ப நண்பர். அலிஜான் கார்த்திகேயனுக்கு  வாட்ச்மேன் வேலை வாங்கிக் கொடுத்தார். இருவரும் திருப்பத்தூர் தினசரி மார்க்கெட் அருகே உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் மாறி மாறி வாட்ச்மேன் வேலையில் ஈடுபட்டனர்.

கடந்த சில மாதங்களாக கார்த்திகேயன் தாமதமாக வேலைக்கு வந்தார்.இதனால் அலிஜான் அதிக நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தது. சனிக்கிழமை காலை 7 மணிக்கு டூட்டி மாற்ற வேண்டும். ஆனால் கார்த்திகேயன் 8.35 மணிக்கு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த அலிஜான் “லேட்டா வருவியா” எனக் கேட்டு பிரம்பால் அடித்தார். வலியைத் தாங்க முடியாத கார்த்திகேயன் அலிஜானைத் தள்ளி கீழே தள்ளி அருகில் இருந்த கான்கிரீட் துண்டை எடுத்து தலையில் அடித்தார்.

   

இதில் படுகாயமடைந்த அலிஜான் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதற்கிடையே அலறல் சத்தம் கேட்டு பக்கத்து கட்டிட செக்யூரிட்டி வந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் அழைத்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அலிஜான் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினர்.

   

போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் உறவினர்  வீட்டில் பதுங்கிய கார்த்திகேயனை கைது செய்தனர். விசாரணையில் “தாமதமாக வருவதாக அடித்தார். வலி தாங்காமல் தள்ளி கான்கிரீட் போட்டுவிட்டு தப்பினேன்” என்றார். மருத்துவ பரிசோதனைக்குப் பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.