சாதாரண தீவிபத்து அல்ல..! யூத ஆலயத்தில் பற்றிய தீ… அந்த ஒரு போன் கால்… அம்பலமான அதிர்ச்சித் திட்டம்… அதிர வைத்த கொச்சி சம்பவம்…!!

By Gayathri on ஐப்பசி 14, 2026

Spread the love

கொச்சி மட்டான்சேரி பகுதியில் உள்ள புகழ்பெற்ற கடவுபாகம் யூத வழிபாட்டுத் தலத்தின் வளாகத்தில் செயல்பட்டு வந்த நர்சரிப் பள்ளி மீது தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நாசவேலையில் ஈடுபட்டதாக எபின் பால் என்ற நபரை காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். வழிபாட்டுத் தலத்திற்கு அருகே நிகழ்ந்த இத்தகைய தாக்குதல் அப்பகுதியில் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியதால், அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட நபரின் கைபேசியை ஆய்வு செய்ததில் கிடைத்த சந்தேகத்திற்கிடமான உரையாடல்கள், இந்த வழக்கின் தீவிரத்தை அதிகரித்துள்ளன. இதன் பின்னணியில் ஏதேனும் பயங்கரவாதக் குழுக்களின் தொடர்பு உள்ளதா, கிரிப்டோகரன்சி வழியே நிதி பரிமாற்றங்கள் நடந்துள்ளனவா மற்றும் பிற குற்றப் பின்னணிகள் இருக்கின்றனவா என்ற கோணங்களில் புலனாய்வு அமைப்புகள் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளன.