“குறைந்த வட்டியில் கடன்… உல்லாசத்திற்கு வரியா…?” ராங் நம்பர்… அந்த பெண்கள் தான் டார்கெட்… கிணற்றில் மிதந்த சடலம்… வசமாக சிக்கிய நபர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

Spread the love

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே குறைந்த வட்டியில் கடன் தருவதாகக் கூறி பெண்களைத் தொடர்புகொண்டு உல்லாசத்திற்கு அழைத்து வந்த கடலூர் நபர் ஒருவர், ரூ.50,000 கடன் பாக்கிக்காகப் பெண் ஒருவரைக் கழுத்தறுத்துக் கொன்று விவசாயக் கிணற்றில் வீசிய கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே உள்ள சிறுநாகலூர் பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் சுமார் 41 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்து வந்த தனிப்படைப் போலீசார் உடலைக் கைப்பற்றி நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவர் சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த மணிமேகலை (41) என்பது தெரியவந்தது. அவரது செல்போன் எண்களை ஆய்வு செய்தபோது, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மதுரவேல் என்ற ஜானி அன்புதாஸ் (45) இதில் ஈடுபட்டது அம்பலமானது.

விசாரணையில், ஜானி தவறான எண்கள் மூலம் கணவரால் கைவிடப்பட்ட பெண்களைக் குறிவைத்து குறைந்த வட்டியில் கடன் தருவதாகக் கூறி, பின்னர் அவர்களை உல்லாசத்திற்கு அழைத்து மிரட்டி வந்துள்ளார். மணிமேகலை அவரிடம் ரூ.1.50 லட்சம் கடன் வாங்கி ரூ.1 லட்சம் வரை திருப்பிச் செலுத்தியுள்ளார். மீதமுள்ள ரூ.50,000 பாக்கிக்காக மணிமேகலையை மேல்மருவத்தூருக்கு வரவழைத்த ஜானி, அவரிடமிருந்த தங்க நகைகளைப் பறித்துக்கொண்டு கத்தியால் கழுத்தை அறுத்துக் கொன்று கிணற்றில் வீசியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாகக் கொடூரன் ஜானியைப் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

என்னது… இறந்தவர்கள் சாம்பலை சூப்பில் கலந்து குடிக்கிறார்களா?… அதிர்ச்சியூட்டும் பழங்குடியினர்களின் விசித்திர செயல்… இதன் பின்னணி என்ன?…

தென் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளில் வெனிசுலா மற்றும் பிரேசில் எல்லைகளில் வாழ்ந்து வரும் யனோமாமி பழங்குடி இன மக்கள், இயற்கை…

11 minutes ago

அடச்சீ… 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த… வேன் ஓட்டுநர் போக்சோவில் கைது… பள்ளியில் நேர்ந்த கொடூரம்…!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பள்ளி வேன் ஓட்டுநர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில்…

18 minutes ago

திக்… திக்… குடும்பத் தகராறில் மனைவி கத்தியால் குத்திக் கொலை… போலீசில் சரணடைந்த அதிர்ச்சி பின்னணி…!!

சென்னை பாலவாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் விவேக் (38). இவருக்கும் முத்து பிரியாவுக்கும் (33) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…

29 minutes ago

அதிர்ச்சி… தற்கொலை முடிவை மாற்றிய முதலை… ஆற்றில் குதித்த பெண்ணை… மரண பய காட்டி காப்பாற்றிய விசித்திர சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியைச் சேர்ந்த 38 வயதுப் பெண்ணான ரேகா, தனது கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக…

41 minutes ago

அம்மாடியோ… 10 வருஷத்துல இவ்வளவு மாறிடுச்சா?… இந்தியாவைப் பார்த்து வியந்த போலந்து பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்தியாவிற்கும் தற்போதைய நவீன இந்தியாவிற்கும் இடையே…

1 மணத்தியாலம் ago