அமெரிக்காவின் பேட்டன் ரூஜ் பகுதியில் மனசாட்சியற்ற கொடூரச் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தோணி ஜெல்க்ஸ் ஜூனியர் என்ற நபர், 4 வயதுச் சிறுமி ஒருவருக்குப் பாலியல் வன்கொடுமை இழைத்த குற்றத்திற்காக போக்சோ வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட 4 வயதுச் சிறுமி உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுப் பரிசோதிக்கப்பட்ட போது, அச்சிறுமிக்குக் கிளமிடியா என்ற பாலியல் நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணையில், சிறுமி அந்த நபரின் வீட்டிற்குச் சென்றபோது, அந்தோணி ஜெல்க்ஸ் சிறுமியின் பேண்ட்டைக் கழற்றி அத்துமீறி நடந்துகொண்டதாகக் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி சூடு, குடும்ப வன்முறை எனப் பல்வேறு குற்றங்களுக்காக ஏற்கனவே 6 முறை கைது செய்யப்பட்டுச் சிறையிலிருந்த இவர், சில வாரங்களுக்கு முன்புதான் பரோலில் வெளியே வந்துள்ளார். பரோலில் வந்த சில நாட்களிலேயே 4 வயதுச் சிறுமிக்கு இந்த நிலைமையை ஏற்படுத்திய கொடூரனைப் போலீசார் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
