மகாராஷ்டிர மாநிலம் பால்ஹர் மாவட்டம் போயிசர் நகரில் உள்ள ஏடிஎம் மையத்திற்குப் பெண் ஒருவர் ரூ.27,000 பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது அவருடைய டெபிட் கார்டு ஏடிஎம் இயந்திரத்தில் எதிர்பாராதவிதமாகச் சிக்கிக்கொண்டது. கார்டை வெளியே எடுக்க முடியாமல் அந்தப் பெண் தவித்துக்கொண்டிருந்தார். அச்சமயம், அந்த ஏடிஎம்மில் ரகசியமாக வாக்கி டாக்கி பொருத்தியிருந்த நபர், அதன் மூலமாக அந்தப் பெண்ணிடம் பேசியுள்ளார்.
“செக்யூரிட்டி கேமரா உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறது, கார்டைப் பலவந்தமாக இழுக்க வேண்டாம். கேன்சல் மற்றும் என்டர் பட்டன்களை அழுத்தி, 3 முறை உங்கள் கார்டு பின் நம்பரை பதிவு செய்யுங்கள்” என வாக்கி டாக்கி குரல் மூலம் நம்ப வைத்துள்ளார். அந்தப் பெண்ணும் அதை நம்பி 3 முறை பின் நம்பரைப் பதிவிட்டுள்ளார். கார்டு வரவில்லை என்றதும், “நாளை டெக்னீசியன் வந்து கார்டை எடுத்துக் கொடுப்பார்” என வாக்கி டாக்கியில் குரல் கூறியதால், அப்பெண் கார்டை விட்டுச் சென்றுள்ளார்.
பெண் சென்ற சில நிமிடங்களிலேயே அவரது கணக்கிலிருந்து ரூ.2.9 லட்சம் பணம் எடுக்கப்பட்டதாகச் செல்போனுக்கு மெசேஜ் வந்தது. அதிர்ச்சியடைந்த அப்பெண் போலிஸில் புகார் அளித்தார். தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலிஸார், இந்த விசித்திர மோசடியில் ஈடுபட்ட ராம்தேவ் பால் என்பவரைக் கைது செய்து, அவரிடமிருந்து ரூ.2.6 லட்சம் ரொக்கம் மற்றும் வாக்கி டாக்கியைக் கைப்பற்றினர்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…