மம்முட்டி தென்னிந்தியாவின் மிகப் பிரபலமான புகழ்பெற்ற நடிகராவார். இவரது இயற்பெயர் முகமது குட்டி பனபிரம்பில் இஸ்மாயில் என்பதாகும். இவர் முதன்மையாக மலையாள சினிமாவில் பணியாற்றுகிறார். மலையாளம் மட்டுமல்ல தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி ஆங்கில மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர் மம்முட்டி.

மம்முட்டி 50 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் பணியாற்றி வருகிறார். இதுவரை 400 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் மம்முட்டி. தனது நடிப்பிற்காக மூன்று தேசிய திரைப்பட விருதுகள் 7 கேரள மாநில திரைப்பட விருதுகள் 13 பிலிம்பேர் விருதுகள் தென்னக விருதுகள் பத்மஸ்ரீ விருது ஆகியவற்றை தன்னகத்தே கொண்டவர் மம்முட்டி.
1971 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் அறிமுகமானார் மம்முட்டி. தமிழில் கே பாலச்சந்தர் இயக்கிய அழகன் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து தளபதி திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்திருப்பார் மம்முட்டி. இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அதற்கு அடுத்ததாக 2002 ஆம் ஆண்டு ஆனந்தம் பிறகு மக்களாட்சி மறுமலர்ச்சி கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார் மம்முட்டி.
இந்நிலையில் தமிழில் ஒரு படத்தில் நடிப்பதற்காக மம்முட்டி சம்பளமே வாங்காமல் நடித்திருக்கிறார். அது என்னவென்று இனி காண்போம். 2002 ஆம் ஆண்டு இயக்குனர் லங்குசாமி இயக்கிய திரைப்படம் ஆனந்தம். இந்த திரைப்படத்தின் மூலமாக தான் அவர் இயக்குனராக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் நாயகனாக மம்முட்டி முரளி அப்பாஸ் தேவயானி ரம்பா டெல்லி கணேஷ் ஸ்ரீ வித்யா போன்ற ஒரு பெரிய நடிகர் பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

குடும்ப கதையம்சம் கொண்ட ஆனந்தம் திரைப்படம் அந்த காலத்தில் மாபெரும் வெற்றி பெற்று குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருந்தது. இந்த திரைப்படத்தில் நடித்த பாவா லக்ஷ்மணன் ஒரு நேர்காணலில் மம்முட்டியை பற்றி பகிர்ந்திருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் லிங்குசாமி இந்த படத்தின் கதையை மம்முட்டியிடம் கூறிய உடனே எனக்கு இந்த கதையை மிகவும் பிடித்திருக்கிறது என்று லிங்குசாமியை கட்டியணைத்து உடனே ஆர்பி சவுத்ரிக்கு போன் செய்து இந்த படத்தில் நான் நடிக்கிறேன் டேட் தருகிறேன் என்று கூறி உடனே இந்த படத்தில் நடித்தார். மேலும் இந்த படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்திருக்கிறார் மம்முட்டி என்று கூறியிருக்கிறார் பாவா லட்சுமணன்.
