“ஒன்னும் தெரியாது…” விஜய் அரசியல் குறித்த கேள்வி…! சட்டென புன்னகைக்கு மம்முட்டி சொன்ன வார்த்தை…!!

By Devi Ramu on சித்திரை 26, 2026

Spread the love

தமிழகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அனைவரும் மே 4-ஆம் தேதி வெளியாகவுள்ள முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். குறிப்பாக, நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் இந்தத் தேர்தலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் மேலோங்கியுள்ளது. விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் நேரடியாகக் களம் கண்டுள்ள நிலையில், திரையுலகைச் சேர்ந்த பலரிடமும் இது குறித்த கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சூழலில், படப்பிடிப்பு ஒன்றிற்காக சென்னை வந்திருந்த மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியிடம் செய்தியாளர்கள் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் தேர்தல் முடிவுகள் குறித்துக் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் மிகவும் சுருக்கமாக “ஒன்றும் தெரியாது” என்று சிரித்தபடியே பதிலளித்துவிட்டுச் சென்றார். பொதுவாக அரசியல் குறித்து வெளிப்படையாகக் கருத்து கூற விரும்பாத மம்மூட்டியின் இந்தச் சுவாரஸ்யமான ரியாக்‌ஷன் தற்போது இணையத்தில் வைரலாகி, ரசிகர்களிடையே பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது.