களம் காவல் படம் குறித்து வீடியோவில் பேசிய மலையாள நடிகர் மம்முட்டி – இணையத்தில் வைரல்!

By Elango on மார்கழி 9, 2025

Spread the love

நடிகர் மம்முட்டி நடிப்பில் மலையாளத்தில் வெளியான களம்காவல் என்ற படம் 3 நாட்களில் 31 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்த படத்தில் ஜெயிலர் பட வில்லன் நடிகர் விநாயகன் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். க்ரைம் திரில்லர் கதைக்களத்தில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை மம்முட்டி மற்றும் அவரது மகன் நடிகர் துல்கர் சல்மான் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படம் குறித்து நடிகர் மம்முட்டி நடிகர் விநாயகனுடன் பேசிய ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் மம்முட்டி பேசியிருப்பதாவது, வணக்கம். நாங்கள் இருவரும் நடித்த களம் காவல் படத்தை மிகப்பெரிய வெற்றி பெற செய்த அனைவருக்கும் நன்றி. புதிய திறமைசாலிகள் பலருடன் சில அனுபவமிக்க கலைஞர்களின் கடின உழைப்பால் இந்த படத்தை உருவாக்கி உள்ளார்கள். ரசிகர்களுக்கு நன்றி. குறிப்பாக குடும்ப ரசிகர்களுக்கு மிகவும் நன்றி. வருங்காலத்திலும் இதே போல் நல்ல படங்களையே தருவோம் என்று நடிகர் மம்முட்டி கூறியிருக்கிறார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.