நயன்தாரா திரிஷாவுக்கே tough கொடுக்கும் நடிகை.. தமிழ் சினிமாவை ஆள வந்துள்ள இளம் கேரளத்து பைங்கிளி..

By Ranjith Kumar

Published on:

மலையாளத்தில் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை தொடர்ந்து க்ரிஷ் ஏ.டி அவர்கள் இயக்கத்தில் பிரேமலூ என்ற படம் வெளியாகி தற்போது மாபெரும் வெற்றி அடைந்து வருகிறது. கிரிஷ் இயக்கத்தில் பகத் பாதையில் தயாரிப்பில் நஸ்லன் கே. கஃபூர், மேத்யூ தாமஸ், மமிதா பைஜு, ஷியாம் மோகன், சங்கீத் பிரதாப் போன்ற மாபெரும் மலையாள பிரபலங்கள் நடிப்பு வெளியாகி தற்போது இந்திய அளவில் பெரிய வசூலை பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 150 கோடிக்கும் மேல் வசூல் ஆகி மலையாளத்தில் சாதனை படைத்துள்ளது.

இப்படத்தின் மூலமாக பிரபலமான மமிதா பைஜூ அவர்கள் தற்போது பெரிய ஹீரோயின்களுக்கு tough கொடுக்கும் அளவிற்கு வளர்ந்து வந்து நிற்கிறார். இவர் நடிப்பு திறமையை பார்த்து அடுத்தடுத்து படங்கள் வந்து குவிந்து கொண்டு இருக்கிறது. சமீப காலத்தில் சூர்யா நடிப்பில் பாலா அவர்கள் இயக்கத்தில் உருவாக்கிக் கொண்டிருந்த வனங்கான் படத்தில் கூட முதலில் இவர் தான் நடிக்க இருந்தார், ஆனால் சில பல காரணத்தால் படப்பிடிப்பும நின்று விட்டது. மமீதா பைஜூ அவர்களும் இப்படத்தில் இருந்து விலகிவிட்டார், அதன் பின் அருண் விஜய் அவர்களை வைத்து இயக்கிக் கொண்டிருக்கிறார் பாலா.

   

அதற்கடுத்ததாக மவிதா பைஜூ தமிழ் படங்களில் வரிசையாக நடித்து வருகிறார். பல இயக்குனர் கண்ணில் இவர் திறமைபட்டதால் அடுத்தடுத்த படங்களை குவிக்க ஆரம்பித்தார்கள். அந்த வரிசையில் ராம்குமார் மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து ஹிட் கொடுத்த படமான ராட்சசன் படத்திற்கு பின் இவர்கள் மீண்டும் இணைகிறார்கள், இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மமீதா பஜு அவர்கள் தான் நடித்து வருகிறாராம். இப்படப்பிடிப்பு கொடைக்கானலில் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று தகவல் வெளியாகியிருந்தது.

இதற்கு அடுத்ததாக ஜிவி பிரகாஷ் அவர்கள் நடிப்பில் உருவாக்கிக் கொண்டிருக்கும் “ரெபல்” என்ற படத்தில் இவர்தான் ஹீரோயினாக நடித்து வருகிறாராம். இவர் அடுத்தடுத்து வரும் தமிழ் படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார். இனி நயன்தாரா சமந்தா அவர்களுக்கு tough கொடுக்கும் அளவிற்கு இவர் மார்க்கெட் ஏறிவிடும் போல இருக்கிறது, அந்த அளவுக்கு இவர் தமிழ் மலையாளம் இரண்டு சினிமாவிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

author avatar
Ranjith Kumar