இன்னும் பல உயிர்கள் போவதற்கு முன் SIR-ஐ நிறுத்துங்க… தேர்தல் ஆணையத்திற்கு மம்தா கோரிக்கை..!!

By Soundarya on கார்த்திகை 19, 2025

Spread the love
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடந்து வருகிறது.  வீடு வீடாக வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 94 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  இந்நிலையில் மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி திட்ட பெண் அலுவலர் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
SIR பணிச்சுமையின் காரணமாக அந்த பெண் தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த் நிலையில், “3 ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணியை இரண்டே மாதங்களில் முடிக்க நிர்பந்திக்கும் செயலை, இன்னும் பல உயிர்கள் போவதற்கு முன் நிறுத்த வேண்டும்” என தேர்தல் ஆணையத்துக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.