அதை பத்தி மட்டும் பேசாதீங்க…. மலேசியாவில் ஜனநாயகன் படம் இசை வெளியீட்டு விழா – திடீரென மலேசியா போலீசார் விஜய்க்கு போட்ட கண்டிஷன்!

By Elango on மார்கழி 22, 2025

Spread the love

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வருகிற ஜனவரி 9ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 27ம் தேதி மலேசியா நாட்டில் உள்ள கோலாலம்பூர் தலைநகரில் நடைபெற உள்ளது. நடிகர் விஜய் நடிகைகள் பூஜா ஹெக்டே மமிதா பைஜூ இயக்குனர் எச் வினோத் உட்பட படக்குழுவினர் 250க்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் கலந்துக்கொள்ள மலேசியா செல்ல உள்ளனர்.

அங்குள்ள ஆடிட்டோரியம் ஒன்றில் 85 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் இடவசதி கொண்ட ஒரு பெரிய அரங்கில் இந்த இசை வெளியீட்டு நடைபெற உள்ளது. இதில் பாட்டு கச்சேரி மற்றும் இசை வெளியீட்டு விழா என 2 பாகங்களாக விழா நடக்கிறது. இந்நிலையில் நடிகர் விஜய் தவெக கட்சியின் தலைவர் என்பதால் மலேசியாவில் நடக்கும் இந்த விழாவில் அரசியல் எதுவும் பேசக்கூடாது. அரசியல் சார்ந்த கருத்துகள் எதையும் சொல்லக் கூடாது என மலேசியா போலீசார் நிபந்தனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.