மலையாள சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் விநாயகன். ஜெயிலர் படத்தில் வில்லன் கேரக்டரில் விநாயகன் சிறப்பாக நடித்ததால் பெரிய வரவேற்பை பெற்றார். இவர் திமிரு உள்ளிட்ட சில படங்களில் ஏற்கனவே நடித்திருந்தாலும், ரஜினிக்கு வில்லனாக நடித்த ஜெயிலர் படம் தான் அவருக்கு மிகப்பெரிய பாராட்டை பெற்று தந்தது.
இப்போது விநாயகன், நடிகர் மம்முட்டியுடன் இணைந்து நடித்த களம்காவல் படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து நடிகர் விநாயகன், இயக்குனர் மிதுன் மானுவல் தாமஸ் இயக்கத்தில் ஆடு 3 என்ற மலையாள படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் சண்டைக் காட்சி படப்பிடிப்பு நடந்தது
சண்டை காட்சியில் நடித்த போது நடிகர் விநாயகனின் தோள்பட்டை எலும்பில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் 6 வாரங்கள் வரை விநாயகன் ஓய்வெடுக்க அறிவுறுத்தி உள்ளனர்.
