நதியா செஞ்ச வேலை.. ஷூட்டிங் ஸ்பாட்டில் “உன்னை கிஸ் பண்ணிடுவன்னு” சொன்ன பிரபல நடிகையின் கணவர்..

By Ranjith Kumar

Published on:

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 களில் கொடிக்கட்டி பறந்த முன்னணி நடிகைகளுள் ஒருவர் நடிகை நதியா. இவர் முதலில் பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல சூப்பர் டூபர் படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகரும் சரிதாவின் முதல் கணவருமான முகேஷ் அவர்கள், 1986-ல் ஷாமா என்ற படத்தில் நதியாவுடன் நடித்திருந்தார்.

முகேஷ் சிரிக்காமலே நகைச்சுவையாக பேசி மற்றவர்களை சிரிக்க வைக்கும் வல்லமை பெற்றவர். இது போல் தான் நந்தியாவிடவும் பல நகைச்சுவையான பேச்சுகளை பேசி உள்ளார். இதனால் நதியாவுக்கு இவர் மேல் கொள்ள பிரியம் உள்ளது. எப்பொழுதும் சூட்டிங் பாட்டிற்கு சென்றால் உடனே முகேஷ் எங்கே என்று தான் கேட்பார், அவரைப் பார்த்தவுடன் அவரிடம் போய் ஒட்டிக் கொள்வாராம். இதனால் சூட்டிங் ஸ்பாட்டில் பல பேருக்கு இவர் மேல் பொறாமையாம். இப்படிதான் ஒரு நாள் நதியாவிடம் முகேஷ் ஒரு நல்ல நகைச்சுவை சொன்ன பொழுது,

   

அதற்கு கண்மூடித்தனமாக சிரித்த நதியா “You are the good joker” என்று சொல்லிவிட்டாராம், சுற்றி இருக்கவங்களுக்கு ஒரே சந்தோஷமாக ஆகிவிட்டதாம், நதியா முகேஷை பார்த்து சொன்னதற்கு ஷூட்டிங் ஸ்பாட்டே விழுந்து விழுந்து சிரித்ததாம், முகேஷ் அவர்களுக்கு ‘ஐயோடா’ அப்படி என்று ஆகிவிட்டதாம். இதன் பிறகு இவரை ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜோக்கர் ஜோக்கர் என்ற நதியா அவர்கள் கூப்பிட ஆரம்பித்தார்களாம், இதை கண்ட படக் குழுவினர்கள் அனைவரும் குஷியில் கலாய்த்து வந்துள்ளார்கள்.

இதை தாங்கிக் கொள்ளாத முகேஷ் ஒரு நாள் நதியாவிடம் ஜோக்கர் என்று கூப்பிட்டால் நான் உனக்கு முத்தம் கொடுத்து விடுவேன் என்று சொல்லிவிட்டாராம், ஒருவேளை இவர் கொடுத்தாலும் கொடுப்பார் என்று வாயை பொத்திக்கொண்டு ஓடி விட்டாராம். ஆனால் இவரை பழிவாங்கும் வேண்டும் என்று நினைத்த நதியா, படப்பிடிப்பு முடிந்த கடைசி நாள் காரில் ஏறிய பின் முகேஷை பார்த்து ஜோக்கர் என்று கத்திவிட்டு அங்கிருந்து சென்று விட்டாராம். மலையாளத்தில் தனியார் சேனலில் முகேஷ் அவர்கள் நகைச்சுவை நிகழ்ச்சி நடத்தி வருகிறார்கள். அதில் நதியாவை சிறப்பு விருந்தினராக அழைத்த போது, இருவரும் சேர்ந்து இந்த விஷயத்தை பற்றி சிரித்து மனம் திறந்து பேசி உள்ளார்கள்.

author avatar
Ranjith Kumar