தங்கலான் பட பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு சிகப்பு நிற ஆடையில் வந்த மாளவிகா.. அதுக்கு பின்னாடி இவ்வளவு பெரிய விஷயம் இருக்கா..?

By admin on ஆவணி 15, 2024

Spread the love

நடிகை மாளவிகா மோகன் கடந்த 2013-ஆம் ஆண்டு மலையாளத்தில் ரிலீசான பட்டம் போலெ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். தமிழில் ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் மூலம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தார். விஜயின் மாஸ்டர் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா நடித்தார். இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சீயான் விக்ரம் நடிப்பில் தங்கலான் திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது.

   

இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். தங்கலான் திரைப்படத்தில் மாளவிகா மோகனன் ஆர்த்தி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த கதாபாத்திரம் மிகவும் சவாலானது. இதற்காக மாளவிகா மோகனன் மெனக்கிட்டுள்ளார். அந்த கதாபாத்திரத்திற்கு மேக்கப் பணிகள் மட்டுமே நான்கு மணி நேரம் நடைபெற்று உள்ளது.

   

 

சண்டை காட்சிகளுக்காக மாளவிகா சிலம்பம் கற்றுக்கொண்டு சிலம்பம் சுற்றினார். அந்த காட்சிகள் ரீ-டேக் எடுக்கப்பத்தால் அவரது கையில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. படம் முழுக்க முழுக்க மேலாடை இல்லாமல் மாளவிகா நடித்துள்ளார். இதனால் திரையில் மாளவிகா வரும் அனைத்து காட்சிகளையும் சிவப்பு நிறமாகவே காட்டியுள்ளனர். அந்த சிவப்பு நிறத்தை பிரதிபலிக்கும் வகையில் தங்கலான் படம் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு சிகப்பு நிற புடவை அணிந்து மாளவிகா வந்துள்ளார்.

பொதுவாக பாலிவுட் திரை உலகை சேர்ந்தவர்கள் தங்களது கதாபாத்திரத்தில் பயன்படுத்தப்பட்ட ஆடைகள் மற்றும் தோற்றத்தை வெளிப்படுத்தும் பொருட்கள் அதே மாதிரி ஆடைகளை அணிந்து வந்து பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். அதேபோல மாளவிகா மோகனன் பாலிவுட் பாணியை பின்பற்றி தங்கலான் பிரமோஷன்களில் சிகப்பு நிற ஆடையை அணிந்து வந்துள்ளார்.