தங்கலானில் அராத்தி கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது இவரா?.. ஒருவேளை அவர் மட்டும் நடிச்சிருந்தா..?

By Nanthini on ஆவணி 16, 2024

Spread the love

தங்கலான் திரைப்படத்தில் முதலில் அராத்தி கதாபாத்திரத்தில் நடிக்க மாளவிகா மோகனனுக்கு பதிலாக பிரபல நடிகை ஒருவரை இயக்குனர் பா. ரஞ்சித் அணுகியுள்ளார். மலையாளத் திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து தனது சினிமா திரை பயணத்தை தொடங்கியவர் தான் நடிகை மாளவிகா மோகனன். அதன் பிறகு இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தொடர்ந்து தமிழிலும் பட வாய்ப்புகள் வரத் தொடங்கியது. ரஜினியின் பேட்ட திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக இவர் இணைந்து நடித்திருந்தார்.

   

அதன் பிறகு முக்கிய கதாபாத்திரம் இல்லை என்றாலும் தனது நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். தற்போது கதை தேர்வில் அதிக கவனம் செலுத்தி வரும் மாளவிகா மோகனன் சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

   

 

இந்த திரைப்படத்தை இயக்குனர் பா ரஞ்சித் இயக்கியிருந்த நிலையில், பொதுவாக சிறிய கதாபாத்திரத்தில் வந்து காணாமல் போகும் மாளவிகா இந்த திரைப்படத்தில் அராத்தி என்ற கதாபாத்திரத்தில் தன்னுடைய வலுவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவருடைய நடிப்பை கண்டு ஒட்டுமொத்த ரசிகர்களும் மிரண்டு உள்ளனர்.

இந்த நிலையில் இவருடைய கதாபாத்திரத்தில் முதலில் நடிகை ராஷ்மிகா மந்தனாவை நடிக்க வைக்க ரஞ்சித் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் ராஷ்மிகாவின் கால் ஷூட் பிரச்சனை காரணமாக அவரால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து மாளவிகா மோகனனை படக்குழு நடிக்க தேர்வு செய்துள்ளது. ஒருவேளை இந்த கதாபாத்திரத்தில் ராஷ்மிகா நடித்திருந்தால் மாளவிகா மோகனன் அளவிற்கு அபார நடிப்பை வெளிப்படுத்தி இருப்பாரா என்பது சந்தேகம்தான்.