கூட்டத்திலிருந்து பறந்து வந்த மாலை… சற்றும் யோசிக்காமல் தளபதி விஜய் செய்த செயல்… இதுதான் எங்க தலைவன்… எமோஷனலான ரசிகர்கள்…

By Begam

Updated on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். சினிமாவில் கலக்கி வரும் இவர் சமீபத்தில்  வெளியிட்ட அரசியல் அறிவிப்பு ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர வைத்துள்ளது.  தற்பொழுது  GOAT திரைப்படத்தில் நடித்து வரும் இவர், அடுத்ததாக  தளபதி 69 திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார்.

vijay 9

இதற்காக அவர் தொடங்கியதே ‘தமிழக வெற்றி கழகம்’ எனும் அரசியல் கட்சி. தற்பொழுது அவரது ரசிகர்கள் அனைவரும் தொண்டர்களாக மாறி தளபதியின் படையாக மாற உள்ளனர். இதுமட்டுமின்றி அரசியல் கட்சி தொடங்கிய உடனே நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கை அதைவிட மாஸ் காட்டியது.

   
Thalapathy Vijay reveals why he has been avoiding media interactions for 10 years

தளபதி ரசிகர்கள் இதனை தற்பொழுது வரை கொண்டாடி தீர்த்து வருகின்றனர். திரைபிரபலங்கள் பலரும் தளபதிக்கு தங்களது வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர். இந்தவேளையில் அரசியல் அறிக்கை வெளியிட்ட பிறகு முதன்முறையாக நடிகர் விஜய் தனது ரசிகர்களை சந்தித்தார்.

Actor Vijay

அப்பொழுது அங்கு ஏகப்பட்ட ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர் தளபதியை நோக்கி பூ மாலை ஒன்றை வீசி எறியவே அது அவரது காலடியில் விழுந்தது. அதை எடுத்து அவர் தனது கழுத்தில் போட்டுக் கொண்ட கியூட் வீடியோ தான் இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு, ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…