மாகாபா ஆனந்துடன் கூட்டணி சேர்ந்து DJ பிளாக் செய்த காரியம்.. இவ்வளவு மோசமா விமர்சனம் பண்றாங்களே..!!

By Priya Ram on செப்டம்பர் 24, 2024

Spread the love

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை ஆங்கராக வேலை பார்த்தார். ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளராக களமிறங்கிய பிரியங்காவுக்கும் மணிமேகலைக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டார். பணம், புகழை தாண்டி சுயமரியாதை தான் தனக்கு முக்கியம் என மணிமேகலை பேசினார்.

   

சமூக வலைதளத்தில் மணிமேகலைக்கு ஆதரவாகவும் பிரியங்காவுக்கு எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரியங்காவின் கேரக்டர், அவரது முன்னாள் கணவர் வாழ்க்கை என அனைத்தையும் பற்றி விமர்சனம் செய்கின்றனர். இந்த நிலையில் தனக்கு எதிராக பேசிய குரேஷி நடிகை சகிலா ஆகியோரை மணிமேகலை சொம்புகள் என குறிப்பிட்டு ஒரு வீடியோவை வெளியிட்டார்.

   

 

இந்த நிலையில் அதற்கு பதிலடிக் கொண்டிருக்கும் விதமாக விஜய் டிவியில் தொகுப்பாளராக வேலை பார்க்கும் மாகாபா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு செருப்பை பதிவிட்டுள்ளார். முன்னதாக இந்த விவகாரம் அப்படி ஒன்றும் முக்கியமானது இல்லை. அவர்கள் இருவருமே பேசி தீர்த்துக் கொள்ளட்டும். நாம் இடையில் நுழைவது சரியாக இருக்காது என பேசி இருந்தார். அப்படி இருக்கும்போது சமூக வலைதள பக்கத்தில் செருப்பை பதிவிட்டு மணிமேகலைக்கு எதிரான மறைமுக தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். மேலும் சனிக்கிழமை எல்லோரும் ஃப்ரீயா இருப்பாங்க.

 

வீடியோ போடலாம் வாங்க. செருப்பு படம் தான் இருக்கு. அமானுஷ்ய சக்திகள் இடமிருந்து விலகி இருக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து டிஜே பிளாக்கும் மாகாபா ஆனந்த் பதிவிட்ட புகைப்படத்தையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பிரியங்காவுக்கு ஆதரவாக பேசிய பிரபலங்கள் பலரும் இந்த விஷயத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்திற்கு ஒரு முடிவே கிடையாதா எனவும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

author avatar
Priya Ram