உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் அருகே டெல்லி–ஹவுரா வழித்தடத்தில் நடைபெற்று வந்த கட்டுமானப் பணியின் போது எதிர்பாராத விதமாக திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த பிரம்மாண்ட தூணும், கனரக கட்டுமான இயந்திரங்களும் நிலைதடுமாறி அருகிலிருந்த ரயில் தண்டவாளத்தின் மீது பயங்கர சத்தத்துடன் சரிந்து விழுந்தன.
அச்சமயம் அவ்வழியாக வரவிருந்த விரைவு ரயிலை, தண்டவாளத்தில் ஏற்பட்ட தடையை முன்கூட்டியே கவனித்த ரயில்வே பணியாளர்கள் துரிதமாகச் செயல்பட்டு சாதுரியமாக நிறுத்தினர். அவர்களின் உடனடி எச்சரிக்கை நடவடிக்கையால் நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிர்கள் காக்கப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டாலும், தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் காரணமாக அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பல மணி நேரம் தடைபட்டது.
