தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுகவில் நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வரும் நிலையில் முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து அதிரடியாக விலகி வருகிறார்கள். சமீபத்தில் செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் இபிஎஸ் மீது நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட வேண்டும் என இபிஎஸ்-ன் பேச்சுக்கு ஜான் பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். கூட்டணியில் இருந்து கொண்டே இபிஎஸ்க்கு அவர் கண்டனம் தெரிவித்தது பேசு பொருளாகியுள்ளது. இது தொடர்பாக ஜான்பாண்டியனிடம் பேசும்போது, கூட்டணி குறித்து மூன்று மாதங்களுக்குப் பிறகு இறுதி முடிவு எடுப்போம் என தெரிவித்தார். இதனால் டிடிவி மற்றும் ஓபிஎஸ்ஐ தொடர்ந்து TMMK கட்சியும் தற்போது அந்த கூட்டணியில் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
