விஜய் கூட்டணியில் இணையும் முக்கிய கட்சிகள்?… ஆட்டம் காணும் தமிழக அரசியல் களம்…!

By Nanthini on ஆடி 28, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இடையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தங்கள் கூட்டணியை பலமாக வைத்துக் கொண்டு மீண்டும் திமுக ஆட்சியை தமிழகத்தில் அமைத்து விடலாம் என முதல்வர் ஸ்டாலின் ஒரு பக்கம் காய் நகர்த்தி கொண்டிருக்க மறுப்பாக்கம் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக ஆட்சியை தமிழகத்தில் நிலைநிறுத்த வேண்டும் என போராடிக் கொண்டிருக்கிறார். இவர்களுக்கு நடுவே தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியலில் பயணித்துக் கொண்டிருக்கும் விஜய் தமிழக மக்களுக்கு புதிய ஆட்சியை வழங்க வேண்டும் என்று உறுதியாக உள்ள நிலையில் இதுவரை எந்த கட்சியுடனும் விஜய் கூட்டணி அமைக்கவில்லை.

இப்படியான நிலையில் பாஜக புறக்கணித்ததை தொடர்ந்து விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் செல்ல ஓபிஎஸ் முடிவெடுப்பார் என்று கூறப்படுகிறது. இதனிடையே திமுகவை தினசரி தாக்கி பேசி வரும் அன்புமணியும் ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்துடன் 2026 தேர்தலை சந்திக்க இருக்கும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியுடன் கூட்டணி செல்ல வாய்ப்புள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதனைப் போலவே தேமுதிக கட்சியும் இதே நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தெரியும் நிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் இந்த மூன்று கட்சிகளும் இணையும் என தெரிகிறது. தற்போது வரை விஜய் யாருடன் கூட்டணி வைப்பார் என்பது அரசியலில் பெரும் எதிர்பார்ப்பாகவே உள்ளது.