தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம்… 2026ல் இத்தனை முக்கிய படங்கள் திரைக்கு வரப்போகுதா?… ஆனா ரேஸில் எத்தனை ஜெயிக்கும்ன்னு தெரியலையே…

By Elango on தை 2, 2026

Spread the love

கடந்தாண்டில் உருவான சில படங்கள் உட்பட முன்னணி நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்கள் இந்த 2026ம் ஆண்டில் திரைக்கு வர இருக்கின்றன. நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 கார்த்தி நடித்த சர்தார் 2 நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி நடிகர் சூர்யா நடித்த கருப்பு நடிகர் சிம்பு நடித்த அரசன் நடிகர் விஷால் நடித்த மகுடம் நடிகை நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் 2 உள்ளிட்ட படங்கள் இந்த ஆண்டில் ரிலீஸாக உள்ளன.

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (எல்ஐகே) நடிகர் விஜய் சேதுபதி நடித்த ட்ரெயின் நடிகர் ரவிமோகன் நடித்த ஜீனி நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா 4 என அதிகளவில் எதிர்பார்க்கப்படும் படங்கள் இந்த ஆண்டில் ரிலீஸாக உள்ளன. இந்த 2026ம் ஆண்டில் பெரிய நட்சத்திரங்கள் நடித்த மொத்தம் 12 படங்கள் ரிலீஸ் ஆகின்றன. நெல்சன் எச் வினோத் சுதா கொங்கரா வெற்றிமாறன் சுந்தர் சி போன்ற நட்சத்திர இயக்குனர்களின் படங்களாகவும் அவை இருக்கின்றன.