மேற்கு வங்கத்தின் கரக்பூர் ரயில் நிலையத்தில் அரசு ரயில்வே காவல் படை மேற்கொண்ட சோதனையின்போது, சந்தேகத்திற்குரிய பயணியின் பையிலிருந்து கணக்கில் காட்டப்படாத ரூ.1.40 கோடி ரொக்கம் அதிரடியாகக் கைப்பற்றப்பட்டது. பிடிபட்ட நபர் ராகுல் சோனி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ‘ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ்’ ரயிலில் காலை வேளையில் கரக்பூர் வந்தடைந்ததாகவும், அங்கிருந்து ஹவுரா நோக்கித் தொடர்ந்து பயணிக்கத் தயாராக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
முறையான ஆவணங்கள் மற்றும் விளக்கங்கள் ஏதுமின்றி இவ்வளவு பெரிய தொகையை எடுத்துச் சென்றது குறித்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பணம் எங்கிருந்து பெறப்பட்டது, யாருக்குக் கொண்டு செல்லப்படவிருந்தது மற்றும் இதன் பின்னணியில் உள்ள சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனைகள் குறித்து அறியும் வகையில் தொடர்புடைய வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு விரிவான விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
