அறிமுக இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் கதையின் நாயகியாக நடித்த படம் தாய்கிழவி. இந்த படத்தில் பவுனுத்தாயி கேரக்டரில் தண்டட்டி கிழவியாக ராதிகா திரையில் வாழ்ந்து காட்டியிருக்கிறார். இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சொந்த நிறுவனம் எஸ்கே புரடக்சன்ஸ் மூலம் தயாரித்துள்ளார்.
இந்த படம் வெளியான அதே நாளில் ராதிகாவின் கணவர் சரத்குமார் நடித்த ஆழி படமும், பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரி அர்ஜூனன் நடித்த போர்த் ப்ளோர் படங்களும் வெளியானது. இதில் முதல் நாள் வசூலில் தாய்கிழவி மொத்தம் ரூ. 2.5 கோடி வசூலை அள்ளியுள்ளது. ஆனால் நடிகர் சரத்குமார் நடித்த ஆழி படம் ரூ. 4 லட்சம் ஆரி நடித்த போர்த் ப்ளோர் படம் ரூ. 4 லட்சம் என முதல் நாளில் வசூலித்துள்ளது. தாய்கிழவியுடன் மோதிய நடிகர்கள் சரத்குமார் ஆரி படங்கள் மிக மோசமான தோல்வியை வசூலில் சந்தித்துள்ளன.
