தமிழகத்தைச் சேர்ந்த தகுதியான ஆண் பணியாளர்களுக்கு ஓமன் நாட்டில் உள்ள ஒரு முன்னணி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிறுவனத்தில் உற்பத்தி இறுதி தயாரிப்பு மற்றும் ஆய்வு , மற்றும் பராமரிப்பு ஆகிய பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி வெளிநாட்டில் பணிபுரிய விரும்பும் தகுதியுள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இப்பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு மாதச் சம்பளமாக குறைந்தபட்சம் ₹44,000 முதல் அதிகபட்சமாக ₹54,000 வரை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி, பணியாளர்களுக்குத் தேவையான உணவு, தங்குமிடம், விசா மற்றும் விமான பயணச்சீட்டு ஆகியவற்றை வேலை அளிக்கும் நிறுவனமே முழுமையாக ஏற்றுக்கொள்ளும். மேலும், இதற்கான முக்கியச் சிறப்பம்சமாக, உங்களுக்கான ஓமன் நாட்டு விசா கிடைத்தப் பின்னர் மட்டுமே இந்நிறுவனத்திற்கான சேவைக்கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்பதால் விண்ணப்பதாரர்கள் நம்பகத்தன்மையுடன் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண் பணியாளர்கள், தங்களின் சுயவிவரக் குறிப்பு , கல்விச் சான்றிதழ்கள், பணி அனுபவச் சான்றிதழ், பாஸ்போர்ட் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றைத் தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த ஆவணங்கள் அனைத்தையும் ovemcinm@gmail.com என்ற அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு, வரும் ஜூலை 28ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது
