தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக தமிழக தேர்தலில் அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது பீகார் தேர்தலை தொடர்ந்து பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே போட்டி என்ற நிலை உருவாகியுள்ளது. பீகார் தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் காங்கிரஸ் பாதியளவு கூட வெற்றியை பதிவு செய்யவில்லை.
இதனால் தமிழக தேர்தலை மட்டுமே காங்கிரஸ் நம்பி இருக்கிறது. தற்போது திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் பீகார் தேர்தலுக்கு முன்பு வரை திமுக தலைமையிடம் அதிக தொகுதிகள் மற்றும் ஆட்சியில் பங்கு என பல கோரிக்கைகளை முன்வைத்து வந்தது. ஆனால் பீகார் தேர்தல் முடிவுக்கு பிறகு தொகுதி பங்கீடு தொடர்பாக வாய் திறக்கவில்லை. இதனால் காங்கிரஸ் பீகார் தேர்தல் முடிவின் மூலம் அதிருப்தியில் உள்ளதாக பலரும் கூறினர். ஆனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்காது, திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று கூறி வந்தனர். இப்படியான நிலையில் திமுக விடும் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக காங்கிரஸ் ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
அந்தக் குழு திமுகவிடம் ஆட்சி பங்கை கேட்டு வலியுறுத்தி வருவதாகவும் அதற்கு ஸ்டாலின் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு காங்கிரசுக்கும் திமுக தலைமைக்கும் தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில் தற்போது புதிதாக திருவண்ணாமலை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் செங்கம் ஜி குமார் அவருடைய பதிவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மாநில செயற்குழு உறுப்பினர், ஒன்றிய குழு தலைவர் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் போன்ற பல்வேறு பதவிகளை வகித்த இவரின் விலகல் காங்கிரசுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் சமயத்தில் காங்கிரஸ் தலைவர்களின் விலகன் அந்த கட்சிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என தெரிகிறது.
