குஜராத்தின் சூரத்தில் ஒரு வீட்டு பணிப்பெண் 60 லட்ச ரூபாய்க்கு ஒரு ஆடம்பரமான 3BHK பிளாட்டை வாங்கியுள்ளார். நளினி உநகர் என்ற வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி வருபவர் 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு ஃப்ளாட்டுக்கு வெறும் 10 லட்சம் ரூபாய் மட்டுமே கடன் வாங்கியுள்ளார். மேலும், அவர் 4 லட்சம் ரூபாய் மரச்சாமான்களுக்காகவும் செலவிட்டுள்ளார். அதாவது ஃப்ளாட் வாங்குவதற்கான செலவில் கணிசமான பகுதியை அந்தப் பணிப்பெண் தனது சொந்த சேமிப்பு மற்றும் பணத்திலிருந்து செலுத்தியுள்ளார்.
My house help came in today looking really happy. She told me she just bought a 3BHK flat in Surat worth ₹60 lakhs, spent ₹4 lakh on furniture and took only a ₹10 lakh loan. I was honestly shocked.
When I asked more, she mentioned that she already owns a two-floor house and a… pic.twitter.com/OWAPW99F46— Nalini Unagar (@NalinisKitchen) October 7, 2025
அதுமட்டுமின்றி அப்பெண் வேலஞ்சா கிராமத்தில் ஏற்கனவே இரண்டு மாடி வீடு மற்றும் ஒரு கடையை வைத்திருக்கிறார், இரண்டும் வாடகைக்கு விடப்பட்டுள்ளன” என்று கூறியதால் நளினி அதிர்ச்சியடைந்துள்ளார். பணிப்பெண்ணின் வார்த்தைகளால் நளினி திகைத்துப் போய், சிறிது நேரம் வாயடைத்துப் போனார். இந்த பதிவை பார்த்த ஒரு பயனர், “சம்பளம் வாங்குபவர்கள் தங்கள் வருமானத்தில் பாதியை வரிகளில் இழக்கிறார்கள், மேலும் இந்த வீட்டு உதவியாளர்கள், தெரு வியாபாரிகள், வரி செலுத்துவதில்லை, எனவே அவர்கள் மற்றவர்களை விட வேகமாக செல்வத்தை குவிக்கிறார்கள்” என்று கூறினார்.
