சினிமாவை விட்டு விலகல் ; விஜய்யை பின்தொடரும் மகேஷ்பாபு … ரகசியம் சொல்லும் பிரபல பத்திரிக்கையாளர்

By Deepika on சித்திரை 6, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முப்பது வருடங்களாக நடித்து மக்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் விஜய். ஒரு கட்டத்தில் இளையதளபதி என அழைக்கப்பட்டவர் சமீபத்தில் தளபதி விஜயாக மாறினார். தன்னுடைய கெரியரில் பீக்கில் இருக்கும் சமயத்தில் அரசியலுக்கு வரப்போவதாக சொல்லி தமிழக வெற்றி கழகம் என தன்னுடைய கட்சி பெயரையும் அறிவித்தார்.

Ghilli and okkadu

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வரும் விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்து விட்டு சினிமாவுக்கு முழுக்கு போட உள்ளார். அதன்பின் தீவிர அரசியலில் களமிறங்க உள்ளார். விஜய் மக்களுக்கு நெருக்கமாக காரணம் அவரின் படங்கள் தான், அதிலும் குறிப்பாக விஜய் நடித்த கில்லி, போக்கிரி எல்லாம் அவருக்கு திருப்புமுனையாக இருந்த படங்கள். இந்த படங்கள் எல்லாம் தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த ஒக்கடு, போக்கிரி படங்களின் ரீமேக் தான்.

   
   

Maheshbabu in pokkiri

 

vijay in pokkiri

படங்கள் மட்டுமல்ல, மகேஷ் பாபுவின் டிரஸிங் கூட விஜய் பின்பற்ற ஆரம்பித்தார். ஆனா இது தெரியாத ரசிகர்கள் மகேஷ் பாபு தான் விஜய் மாதிரி செய்வதாக குற்றம் சாட்டுவர். ஆனால் உண்மையில், மகேஷ் பாபு தான் ஒரிஜினல், அப்படிப்பட்ட மகேஷ் பாபுவும் சினிமாவுக்கு முழுக்கு போடா உள்ளதாக சில தினங்களாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

cheyyaru balu about maheshbabu

அவர் கூறியதாவது, மகேஷ் பாபு கண்டிப்பாக சினிமாவை விட்டு விலக மாட்டார், அவர் குறித்து வரும் இந்த செய்தி வதந்தி தான். இப்போது ராஜமவுலி இயக்கத்தில் நடிக்க உள்ளார். அவர் விஜய்யை பார்த்து அரசியலுக்கு வரப்போவதாக பலர் கூறினர். ஆனால் அது பொய், மகேஷ் பாபு அரசியலுக்கு வந்து தான் நல்லது செய்ய வேண்டும் என்று இல்லை, அவர் நிஜ வாழ்க்கையில் நடிகராக இருந்து கொண்டே எத்தனையோ நல் உதவிகளை செய்து வருகிறார். ஆகையால் இது வெறும் வதந்தி தான் என கூறியுள்ளார் செய்யாறு பாலு.