நண்பர்களுடன் 11- வது பிறந்தநாளை கொண்டாடிய மகேஷ்பாபு மகள் சித்தாரா… வைரலாகும் வீடியோ..!!

By Nanthini on ஆடி 24, 2023

Spread the love

சவுத் இந்தியா பிரின்ஸ் மற்றும் டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்றுரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வரும் நடிகர் தான் மகேஷ் பாபு. பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் இளைய மகன். டோலிவுட்டில் பல வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார். கடந்த 1979 ஆம் ஆண்டு நீடா என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

   

 

   

அதன் பிறகு 1999 ஆம் ஆண்டு ராஜகுமாரடு என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது பல்வேறு படங்களில் நடித்து அசத்தி வருகிறார். இந்நிலையில் மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா தற்போது விளம்பர மாடலாக தனது கலை பயணத்தை தொடங்கியுள்ளார். ஒரு நகைக்கடைக்கு அவர் மாடலாக போஸ் கொடுத்த நிலையில் சமீபத்தில் அந்த வீடியோ வைரலானது.

 

இந்நிலையில் சித்தாரா சமீபத்தில் தனது 11-வது பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடிய நிலையில் அது தொடர்பான வீடியோவை பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

sitara ???? இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sitaraghattamaneni)