அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் மாவட்டச் செயலாளர் மகேந்திரன் தலைமையில், மடத்துக்குளம் அருகே உள்ள காரத்தொழுவு ஊராட்சியில் நடைபெற்ற மாபெரும் இணைப்பு விழாவில் 500-க்கும் மேற்பட்டோர் தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர். மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் இந்நிகழ்ச்சியில் கழகத்தில் இணைந்தனர்.
ஏற்கனவே சில அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெக பக்கம் சாய்ந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது அடிமட்டக் கட்சி நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும் தவெக தங்கள் பக்கம் ஈர்க்கத் தொடங்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிரடி நகர்வுகள் வரவிருக்கும் தேர்தல்களுக்கு முன்னதாக அரசியல் களத்தில் தவெகவின் பலத்தை வேகமாக அதிகரித்து வருவதைக் காட்டுகின்றன.
