தமிழ் சின்னத்திரையில் மற்ற சேனல்களுடன் ஒப்பிடும்போது விஜய் டிவிக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் தனி ஒரு வரவேற்பு உண்டு. சீரியல்களை காட்டிலும் மற்ற பொழுது போக்கு நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. விஜய் டிவி நிகழ்ச்சிக்கு என்னதான் தொடர்ந்து நெகடிவ் விமர்சனங்கள் வந்தாலும் அதனை மாற்றி பாசிட்டிவாக கொண்டு போவது தான் விஜய் டிவி சேனலின் சாமர்த்தியம் ஆகும். ஆனால் சமீபகாலமாக விஜய் டிவி திரும்புகின்ற இடம் எல்லாம் சூனியம் வைக்கப்பட்டது போல தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றது.
அதன்படி சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை கலர்ஸ் சேனல் வாங்கியதாகவும் விரைவில் விஜய் டிவி சேனல் கைமாற போவதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இப்படியான நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வருகின்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை விட்டு தொகுப்பாளினி பிரியங்கா தற்காலிகமாக ஒதுங்கியுள்ளார். இதற்கு காரணம் பிரியங்காவுக்கு சமீபத்தில் தான் திருமணம் முடிந்தது. அதனால் இப்போதைக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை அவரால் தொகுத்து வழங்க முடியாது. இப்படியான நிலையில் இந்த வாரம் முதல் பிரியங்காவிற்கு பதில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது மகாநதி சீரியலில் காவேரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் லட்சுமி பிரியா தான்.
இவருக்கு சின்னத்திரையில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் விகா ஃபேன்ஸ் என்று சொல்லக்கூடிய அளவுக்கு மக்கள் மனதை வென்று விட்டார். தற்போது அவர் முதல் முறையாக தொகுப்பாளினியாக புது அவதாரம் எடுத்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ள நிலையில் அது தொடர்பான ப்ரோமோ வெளியாகி உள்ளது. லட்சுமி பிரியாவுக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ள நிலையில் அதனை தெரிந்து கொண்ட விஜய் டிவி தற்போது விட்ட இடத்தை பிடிக்க சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பொறுப்பை அவருக்கு வழங்கியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முழுமையான தேர்தல் அறிக்கை இன்று மாலை 3 மணி அளவில் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர்…
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…