விஜய் டிவியில் கடந்த ஜனவரி மாதம் முதல் மகாநதி சீரியல் ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலில் தந்தையை இழந்த நான்கு சகோதரிகளின் வாழ்க்கை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலில் காவேரி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் லட்சுமி பிரியா நடித்து வருகிறார். இவருக்கு நவீனுடன் திருமணமா? விஜயுடன் திருமணமா? என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் தங்கையின் அறுவை சிகிச்சைக்காக பணம் கொடுத்தால் காவேரி ஓராண்டு மனைவியாக இருக்க வேண்டும் என விஜய் ஒப்பந்தம் செய்து கொண்டார். அவருடன் திருமணம் நடைபெறுவதை போன்று விஜய் தொலைக்காட்சியில் முன்னோட்ட வீடியோக்கள் வெளியானது.

ஆனால் நிவின் காவேரி ஜோடிக்கு தான் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இதனால் காவேரிக்கு யாருடன் திருமணம் நடக்கும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் காவேரிக்கும், நிவினுக்கும் திருமணம் நடைபெற்றதை போன்று தாலியுடன் இருக்கும் படத்தை லக்ஷ்மி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் நிவின், காவேரி ஜோடிக்கு திருமணம் நடைபெற்றதா? என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

